செவ்வாய், 21 ஆகஸ்ட், 2018

ஆன்லைனில் எளிமையாக பணம் சம்பாதிக்கலாம்.



இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி?



 earn money online



இணையத்தில் உள்ள சிறந்த ஆன்லைன் வேலைவாய்ப்புகளைக் குறித்து இந்த பதிவு உங்களுக்கு வழிகாட்டும். வீட்டிலிருந்தபடியே 0% முதலீடு இல்லாமல் நம்மால் நல்ல கணிசமான வருமானத்தை ஈட்ட முடியும். 'இணையத்தில் எப்படி பணம் சம்பாதிக்கலாம்' என கூகிள் தேடுபொறி மூலம் தேடி நீங்கள் இங்கு வந்திருந்தால் சரியான தகவல்களைத் தான் பெற்றுள்ளீர்கள். சரி, இப்பொழுது நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய இன்னொரு முக்கியமான செய்தி - இணையத்தில் தேடுதல் செய்யும் போது ஏதாவது வெப்சைட் ஒரு குறிப்பிட்ட பணத்தை செலுத்திவிட்டு ஆன்லைன் வேலையில் சேரச்சொன்னால் விழிப்புடன் செயல்படுங்கள். நிறைய வெப்சைட்கள் பணத்தை நம்மிடம் இருந்து மோசடி செய்ய இவ்வாறு வலைவிரிக்கின்றன. உங்கள் ஆர்வத்தைக் குலைப்பதாகவோ, அச்சமூட்டுவதாகவோ எண்ண வேண்டாம். தெளிவாக உண்மையை எடுத்துச் சொல்லுவதுதான் நல்லது. நீங்கள் ஆன்லைனில் பணம் சம்பாதிக்க விரும்பி இங்கு வந்துள்ளீர்கள். உங்களுக்கு தரவேண்டியது வேலை & ஊதியம். நீங்கள் தரவேண்டியது உழைப்பு - அவ்வளவுதான். இதற்கு நடுவில் வேலையில் சேர ஒரு தொகையை செல்லுத்த சொன்னால் சிறிது ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது அவசியம்.

தேவைகள்: இனி இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி என காணலாம் வாருங்கள். இப்பக்கத்தில் உங்களுக்கு சில அருமையான ஆன்லைன் வேலைகளும் வெப்சைட்களும் அறிமுகம் செய்து வைக்கப்படும். நீங்கள் சரியாக பயன்படுத்தி வந்தால் இத்தளங்கள் உங்களுக்கு தவறாமல் கனிகொடுக்கின்ற மரங்களைப் போலாகும். இப்பொழுது உங்களுக்கு தேவையானவை இரண்டுதான்,
  1. இணையவசதி கொண்ட ஒரு கம்ப்யூட்டர்
  2. ஆன்லைன் வேலை செய்யத்தேவையான ஆர்வம்
இவைகளைத் தவிர கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங், வங்கிகணக்கு, முதலீடு, முன்-அனுபவம், படிப்பு, திறன்கள் என எதுவும் தேவையில்லை. இவ்விரண்டும் உள்ளவர்கள் யாரானாலும் கீழே தொடரலாம். வேலைகள் என்ன என தெரிந்து கொண்டு சம்பாதிக்க ஆரம்பிக்கலாம்.



skrill அல்லது  neteller கணக்கை தயார் செய்துகொள்ளுங்கள்



முதலில் உங்களுக்கு ஒரு skrill or neteller அக்கொண்ட் (கணக்கு) வேண்டும். skrill  என்பது ஒரு வெப்சைட். இணையத்தில் இந்த வெப்சைட் ஒரு வங்கி போல செயல்படுகிறது. நீங்கள் செய்யவேண்டியது இதுதான்.

  1.  https://www.skrill.com என்ற முகவரிக்கு செல்லுங்கள்
  2. வெப்சைட் லோடானதும்,  உங்கள் ஈமெயில் ஐடியை பூர்த்தி செய்து பாஸ்வர்டையும் பூர்த்தி செய்து அடுத்தடுத்து என முழுமையாக பேஸ்புக் உருவாக்குவது போலவே இந்த கணக்கையும் உருவாக்கிடுங்கள்.
  3. இப்பொழுது, கணக்குப்பதிவு படிவத்தில் நீங்கள் கொடுத்த உங்கள் ஈமெயில் முகவரிக்கு skrill ஒரு மின்னஞ்சல் அனுப்பும். அந்த மின்னஞ்சலை திறந்து அதில் உள்ள தொடுப்பை சொடுக்குங்கள், உங்கள் skrill கணக்கு உடனடியாக ஆக்டிவேட் ஆகிவிடும்.
இப்பொழுது இந்த ஈமெயில் முகவரியையும், கடவுச்சொல்லையும் கொண்டு உங்களது skrill கணக்கை லாகின் செய்யலாம். இந்த skrill அக்கௌண்ட் ஒரு பேங்க் அக்கௌண்ட் போன்றது. இணையத்தில் நீங்கள் சம்பாதிக்கும் பணத்தை இந்த skrill கணக்கில் சேமித்து வைத்துக் கொள்ளலாம். உதாரணத்திற்கு, ஆன்லைன் வேலை வழங்குகின்ற ஒரு வெப்சைட்டில் நீங்கள் இரண்டு டாலர் (2$) சம்பாதித்து இருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். உங்களுக்கு அப்பணம் தேவைப்படும் போது, 'Withdraw', 'Cashout', 'Payment', 'Payout' என்று எதாவது தொடுப்பு அந்த வெப்சைட்டில் இருக்கிறதா என பாருங்கள். கண்டிப்பாக இருக்கும், அதனை சொடுக்குங்கள். உடனே ஒரு புதிய பக்கம் தோன்றும். அதில் Payment Mode/Payment Option என்ற கட்டத்தில் 'skrill' என தேர்வு செய்து உங்களது skrill அக்கௌண்டை லாகின் செய்ய நீங்கள் பயன்படுத்தும் ஈமெயில் முகவரியை சமர்ப்பியுங்கள். நீங்கள் சம்பாதித்த பணம் உங்கள் skrll அக்கௌண்டிற்கு வந்துவிடும். இப்படியே நீங்கள் சம்பாதிக்கும் பணத்தை உங்கள் skrill கணக்கில் சேர்த்து வைத்து கொண்டே வாருங்கள். skrill கணக்கில் இருந்து பணத்தை பெற்றுக்கொள்ள skrillல் லாகின் செய்து 'Withdraw Funds' என்ற தொடுப்பை அழுத்துங்கள். அதில் பணத்தை எவ்வாறு பெறலாம் என வழிகள் பட்டியல் இடப்பட்டிருக்கும். அதில் உங்களுக்கு தேவையான வழியைத் தேர்வுசெய்து, படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்தால் உங்கள் நாட்டுப் பணமாகவே வந்துவிடும். அல்லது நீங்கள், உங்களது skrill அக்கௌண்டிலேயே பணத்தை சேமித்து வைத்துக்கொண்டே இருக்கலாம். அதில் உள்ள பணத்தை கொண்டு வெப்சைட், சாப்ட்வேர், சி.டி, புத்தகம், பொருள் வாங்குவது... என இணையத்தில் ஷாப்பிங்க் கூட செய்யலாம். நீங்கள் விரும்பினால் உங்களது skrill அக்கௌண்டில் சேர்ந்த பணத்தை இணையத்திலேயே முதலீடு செய்து இன்னும் அதிகமாகவும் சம்பாதிக்கலாம் (இது குறித்து கீழே செய்திகள் உள்ளன). skrill அக்கௌண்டில் எவ்வளவு பணத்தை சேமிக்கிறோமோ அவ்வளவும் லாபம் தான். இணையத்தில் சம்பாதிக்க கண்டிப்பாக இதெல்லாம் கற்றுக்கொள்ளத்தான் வேண்டும். நீங்கள் ஆன்லைன் வேலைகளுக்கு புதியவர் என்றால் இதெல்லாம் பார்க்க பெரிய வேலைகள் போல தெரியலாம், எனினும் நீங்களாகவே செய்துபார்க்கும் போது நன்றாக புரிந்துகொள்வீர்கள். இப்பொழுது skrill என்றால் என்ன என்று ஒரு மேலோட்டமாக உங்களுக்கு தெரிந்திருக்கும். அதனை புரிய வைக்கத்தான் இத்தனை விளக்கங்களும் :-)
ஸ்க்ரில் அக்கவுண்ட்டை போலவே நெட்லரையும் பயன்படுத்தலாம் .
https://www.neteller.com

வேலைகளைக் காணலாம் வாருங்கள்...